செய்திகள்

நீர்தேக்கத்திற்கு அருகில் தீ 5 ஏக்கர் நாசம்

மஸ்கெலியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மவுஸ்ஸாகலை நீர்தேக்கத்திற்கு அருகில் உள்ள காட்டுப்பகுதியில் இன்று  குறித்த காடு தீப்பற்றி 5 ஏக்கர் வரை முற்றாக எரிந்து நாசமாகியுள்ளது.

மஸ்கெலியா நல்லதண்ணி பிரதான வீதியில் பிரவுண்லோ பகுதி காட்டுப்பகுதியில் இவ்வாறு தீ பரவியுள்ளது.

யாராவது இதற்கு தீ வைத்திருப்பார்கள் என பொலிஸார் சந்தேகப்படுகின்றனர்.

மஸ்கெலியா பொலிஸாரும் பொது மக்களும் இணைந்து தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.

இந்த தீ விபத்து சம்மந்தமான மேலதிக விசாரணைகளை மஸ்கெலியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

DSC07794

DSC07787

DSC07782

DSC07779

DSC07776