செய்திகள்

நீர்வெட்டு அமுலுக்கு வராது

நாடு பூராகவும் வரட்சியான காலநிலை தொடர்ந்தாலும் நீர் வெட்டு அமுல்படுத்தப்படமாட்டாது எனவும் தடையின்றி நீரை விநியோகிக்கக் கூடியளவு நீர் நிலைகளில் போதியளவு நீர் இருப்பதாகவும் தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் பொதுமுகாமையாளர் பீ.ஓ.ஆர்.பாலசூரிய தெரிவித்துள்ளார்.
தற்போது நாட்டில் நிலவும் வரட்சியான காலநிலை தொடருமாகயிருந்தால் நீர் வெட்டு அமுல்படுத்தப்படலாம் என செய்திகள் வெளியாகும் நிலையில், நேற்று திங்கட்கிழமை கொழும்பில் அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பொன்றில் கலந்துகொண்ட தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் பொதுமுகாமையாளரிடம், ஊடகவியலாளர்கள் அது தொடர்பாக எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
n10