செய்திகள்

நுவரெலியாவில் சிரிசேனவின் கட்சியில் போட்டியியிட ஒருவரும் இல்லை : நவீன் திஸாநாயக்க

அரசாங்கத்தால் கொண்டு வரப்படுகின்ற 20 ஆவது திருத்த சட்டத்திற்கு இடையூறு வரும் பட்சத்தில் வரும் தேர்தலில் ஜக்கிய தேசிய கட்சிக்கு அமோக வெற்றியை பெற்றுக்கொடுத்து 20 ஆவது சட்டத்தை அமுல்ப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என சுற்றுலாதுறை மற்றும் விளையாட்டுதுறை அமைச்சர் நவீன் திஸாநாயக்க தெரிவித்தார்.

தலவாக்கலை நகரில் நிர்மாணிக்கப்பட்டுள்ள அஞ்சல் அலுவலக புதிய கட்டிடத்தை திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் இங்கு உரையாற்றுகையில்…

நாட்டில் நடைபெற்று முடிந்த ஜனாதிபதி தேர்தலில் படும் தோழ்வியடைந்த முன்னால் ஜனாதிபதி அவர்கள் தற்போது உள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனவிற்கு உதவிகரம் நீட்டாமல் தற்போது மீண்டும் பிரதமர் ஆகுவதற்காக சூழ்ச்சிகளை மேற்கொண்டு வருகின்றார்.

தற்போது பாராளுமன்றத்தில் ஜக்கிய தேசிய கட்சிக்கு ஆட்சி பலம் குறைவாக காணப்படுவதனால் உடனடியாக பொது தேர்தலை நடத்துவது தொடர்பில் கடந்த வௌ்ளிக்கிழமை ஜக்கிய தேசிய கட்சியின் காரியாலயத்தில் விசேட கூட்டம் ஒன்றினை நடத்தினோம். இதனடிப்படையில் ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனவிற்கு இதனை தெரிவித்து நடைமுறைப்படுத்துவதற்காக தீர்மானம் ஒன்றினை எடுத்துள்ளோம்.

தற்போது ஜக்கிய மக்கள் சுதந்திர முன்னணி நாளா பக்கமாகவும் பிளவுப்பட்டிருப்பதனால் நடைபெறவுள்ள தேர்தலில் நுவரெலியா மாவட்டத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனவின் கட்சியில் போட்டியிடுவதற்கு ஒருவரும் இல்லை என அவர் மேலும் தெரிவித்தார்.