செய்திகள்

நூடில்ஸ் தொடர்பாக ஆராய சுகாதார அமைச்சு நடவடிக்கை

மனித உடலுக்கு தீங்கு விளைவிக்க கூடிய இரசாயன பதார்த்தங்கள் உள்ளடங்கிய நூடில்ஸ் வகைகள் நாட்டில் விற்கப்படுகின்றதா என ஆராய்வதற்கு சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது.
இதன்படி சந்தையில் தற்போது விற்பனையாகும் சகல நூடில்ஸ் வகைகளையும் பரிசோதனைக்கு உடபடுத்துவதற்கு சுகாதார அமைச்சு நடவடிக்கையெடுத்துள்ளது.
அவ்வாறாக மனித உடலுக்கு தீங்கு விளைவிக்க கூடிய ஏதேனும் பதார்த்தம் உள்ளடக்கப்பட்டுள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டால் அந்த நூடில்ஸ் வகையை தடை செய்வதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இந்தியா உள்ளிட்ட சில நாடுகளில் ஒரு சில நூடில்ஸ் வகைகளில் மனித உடலுக்கு தீங்கு விளைவிக்கும் பொருட்கள் உள்ளடக்கப்பட்டிருந்தமை கண்டுபிடிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.