செய்திகள்

நூடில்ஸ் தொடர்பாக ஆராய பொதுபல சேனா நுகர்வோர் அதிகார சபைக்கு செல்ல திட்டம்

நாட்டில் விற்பனையாகும் நூடில்ஸ் வகைகளில் மனித உடலுக்கு தீங்கு ஏற்படுத்தும் வகையிலான மூலப்பொருட்கள் உள்ளடங்கியுள்ளதாக ஆராய்வதற்காக பொதுபல சேனா அமைப்பினர் இன்று கொழும்பிலுள்ள நுகர்வோர் அதிகாரசபைக்கு செல்லவுள்ளனர்.
இன்று காலை 10 மணியளவில் இவர்கள் அங்கு செல்ல திட்டமிட்டுள்ளனர்.
இந்தியா உள்ளிட்ட சில நாடுகளில் ஒரு சில நூடில்ஸ் வகைகளில் மனித உடலுக்கு தீங்கு ஏற்படுத்தும் இரசாயன பதார்த்தங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளதாக கண்டு பிடிக்கப்பட்டு அந்த நாடுகளில் அவற்றுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ள நிலையில் இலங்கையிலும் நூடில்ஸ் வகைகள் உள்ளதா என ஆய்வு நடத்துவதற்கு நுகர்வோர் அதிகாரசபை தீர்மானித்துள்ள நிலையிலேயே பொதுபல சேனாவும் அது தொடர்பாக ஆராய்வதற்கு அங்கு செல்ல திட்டமிட்டுள்ளது.