செய்திகள்

நூறு நாளில் நல்லாட்சி நடைபெறாது என்கிறார் முன்னாள் பிரதம நீதியரசர் !

நூறுநாளில் நல்லாட்சி இடம்பெற்றதாக கூறப்படுமாயின் அது உலக அரசியல் வரலாற்றில் கூறப்படும் பாரிய பொய் என முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என்.சில்வா தெரிவித்துள்ளார்.

கொழும்பு பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் ​போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

கடந்த தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி மீண்டும் தேர்தலில் போட்டியிட தான் எதிர்ப்பு வெளியிட்டதாக அவர் இங்கு மேலும் குறிப்பிட்டுள்ளார்.

நல்லாட்சியின் முக்கிய விடயம் சட்டத்தின் படி செயற்படும் நிர்வாகம் என்பதே எனவும் எனினும் பிரதமர் நியமனம் அதற்கு முரண்படுவதாகவும் சரத் என் சில்வா தெரிவித்துள்ளார்.