செய்திகள்

நெஞ்சே எழு 14 – ரோல் மொடல்

க.ஜெனார்த்தனன் (பயிற்சியாளர், BBA, MPM, NDTHRD, IFMA )

சிந்தனைகளில் எழும் மாற்றங்கள் புரட்சியாகின்றன. அந்த புரட்சிகளை பல வழிகளிலும் தீ மூட்டியவர்கள் மற்றவர்களுக்கு ஒரு வழிகாட்டிகளாகவும், ஆதர்ஷன தலைவர்களாகவும், நாயகர்களாகவும், இவர்போல் இருக்கவேண்டும் என்ற வாழ்வாசைகளையும் பலரது மனவோட்டங்களில் தூவி விடுபவர்களாகவும் இருக்கின்றனர். ஏராளமான துலங்கல்களுக்கு ஆணித்தரமான தூண்டல் ஒன்றே போதுமானது. அதானாலேயே ரோல் மொடல்களை அறிஞர்கள் ‘இலட்சியத் தூண்டிகள்’ என்கின்றனர்.

பெரும்பாலும் ரோல் மொடல்கள் என்றவுடனேயே அவர் உலகப்பிரசித்தி பெற்றவராக இருக்கவேண்டும் என்ற மாஜையுடன் பெரும்பாலும் கற்றவர்களே இருப்பது அபத்தமானதொன்றுதான். அதாவது உலகப்பிரசித்தி பெற்றவர்களும் பலருக்கு ரோல் மொடல்களாக இருப்பதில் எந்தவிதமான தவறுகளும் இல்லை.. ஆனால் அவர்கள் கண்முன்னே வாழ்ந்த, வாழ்ந்துகாட்டிய அவர்களது தாய், தந்தை, உறவினர்கள், ஆசியர்கள், நண்பர்கள், சேவையாளர்கள் என யாராவது ஒருவர் கூட ஏதோ ஒரு வகையில் இவர்களின் ரோல் மொடல்களாக இருந்திருப்பார்கள் என்பதில் ஐயமில்லை.

உலகில் இலட்சியங்களை விதைத்த ரோல் மொடல்கள் நேரடிக்காட்சியன்றி, காலங்கள், ஏன்! யுகங்கள் கடந்தும், பல இலட்சம் பேர்களின் ரோல் மொடல்களாக அவர்களின் மனங்களில் இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கும் பெருமைகள் இவர்களுக்கே உள்ளது என்றாலும் அதில் தவறொன்றும் இல்லை.

தலைவர்களாக மட்டுமன்றி ஒவ்வொரு துறைகளிலும் மீஉயர் சிறப்புக்களையும், அந்த துறையின் சக்கரவர்த்தியாக இருந்தவர்கள், இருப்பவர்களும்கூட அந்த துறைகளை நேசிக்கும் பலருக்கு என்றும் ரோல் மொடல்களாக இருப்பவர்களே ஆவர்.

ஜோசப் ஸ்கூலிங் என்ற சிங்கப்பூரைச் சேர்ந்த சிறுவனுக்கு நினைவு தெரிந்த நாள் முதலாக ‘நீச்சல் புயல்’ என வர்ணிக்கப்படும் மைக்கல் பெல்ப்ஸ் மீது அளவு கடந்த அபிமானம். அவரையே தனது ரோல் மொடலாக கருதுகின்றான். அவரைப்போலவே தான் உலகம் மெச்சும் சாதனையாளனாக வரவேண்டும் என்று மனது முழுவதும் வைராக்கியமாக இருக்கின்றான். சிறுவயதில் இருந்து நீச்சலை முழு ஈடுபாட்டோடு பழகத்தொடங்கினான். மைக்கல் பெல்ப்ஸ் மீது கொண்ட தீராத அபிமானத்தால் ஒருமுறையாவது அவரை நேரில் சந்திக்கவேண்டும் என்று பேரவாவுடன் இருந்தான். தனது 13 ஆவது வயதில் அவனது கனவு நனவானது, அவரை பீஜிங் நகரில் 2008 ஆம் ஆண்டு ஒலிம்பிக் நடைபெறும்போது சந்தித்து தனது ஆசைகளில் ஒன்றை நிறைவேற்றிக்கொண்டான்.

Joseph Schooling

இது பற்றி விபரிக்கையில் அவன், தனக்கு அந்த நாள் முழுவதும் நித்திரை வரவில்லை எனவும், அடுத்த முறை அவரை சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கும்போது தானும் ஒரு சாதனையாளனாக இருந்தே தனது ரோல் மொடலான பெல்ப்ஸூக்கு கொளரவம் வளங்கவேண்டும் என்று நினைத்ததாக 2008 ஆம் ஆண்டு கூறியிருந்தான்.

காலங்கள் மாறுகின்றன, தனது ரோல் மொடலையே பார்த்து வளர்ந்து அவரையே தனது சக்தியாக நினைத்து பல சாதனைகளையும் புரிகின்றான் ஸ்கூலிங். வெல்லும் போட்டிகளிலெம்லாம் பதக்கங்களை குவிக்கின்றான், ஒவ்வொரு பதக்கங்களை அணியும்போதும் தனது ரோல் மொடலான மைக்கல் பெல்ப்ஸை மனதுக்குள் நினைத்துக்கொள்வான் ஸ்கூலிங்.

2016 தனது 21 ஆவது வயதில் ரியோ ஒலிம்பிக் போட்டியில் கலந்துகொள்ளும் வாய்ப்பை பெறுகின்றான் ஜோசப் ஸ்கூலிங், 100 மீற்றர்களுக்கான ‘பட்டர்பிளை’ நீச்சல் போட்டிக்கு போட்டி நடைபெறும் தடாகத்தில் தயாராக நிற்கின்றான். என்னவொரு ஆச்சரியம் இன்னும் ஒரு போட்டியாளராக அவனது ரோல் மொடலான மைக்கல் பெப்ஸ்.. போட்டிச் சமிக்கை கொடுக்கப்படுகின்றது. நீரைக்கிழித்து முன் செல்கின்றான் ஸ்கூலிங்.. 50.39 செக்கன் களில் இலக்கை அடைகின்றான், அவனுக்கு அடுத்தாக 51.14 செக்கன்களில் இரண்டாவது இடத்தை பெறுகின்றார் மைக்கல் பெல்ப்ஸ். சிறுவயத்தில் இருந்தே தனது ரோல் மொலாக இருந்த ஒருவருக்கு அவரை ரோல்மொடலாக கொண்ட இன்னுமொருவர் கொடுக்கும் அதி உயர் கௌரவம் இதைத்தவிர வேறு எதுவாக இருக்கும்?

இன்று இந்தியாவின் சுப்பர் ஸ்ரார் என வர்ணிக்கப்படும் ரஜினிகாந்த் பெங்களுரில் சிறுவனாக இருந்தபோது ரவிச்சந்திரனின் பெரும் ரசிகனாக இருந்ததோடு, ரவிச்சிந்திரன் இரசிகர் மன்ற செயலாளராகவும் இருந்தவர். ரவிசந்திரனை அன்றையகால ஸ்ரைல் நடிகர் என வர்ணிப்பதுண்டு, அவரிடமிருந்தே ஸ்ரைல் என்ற எண்ணங்கள் ரஜினியின் மனதை கௌ;ளை கொண்டது. அதன் காரணமாக பலவிதமான ஸ்ரைல்களையும் செய்து பார்த்திருந்தார் ரஜினிகாந்த். பின்னர் அவருக்கு பாலச்சந்தரால் நடிக்கும் வாய்ப்பக்கள் வழங்கப்பட்டபோது அவர் காட்டிக்கொண்ட ஸ்ரைல்களே அவரை இந்த அளவுக்கு சுப்பர் ஸ்ரார் என்ன அந்தஸ்துக்கு இழுத்துச்சென்றுள்ளது.

இருந்தபோதிலும் ரவிச்சந்திரன் எட்டியும் பார்க்காத இடங்களை தொட்டுநின்ற ரஜினி நினைத்திருந்திருந்தால் தான் ரவிச்சந்திரனின் இரசிகன் அவரது இரசிகர் சங்க செயலாளராக இருந்தை எல்லாம் மறைத்திருக்கலாம். அவர் அப்படி எதுவும் செய்துகொள்ளவில்லை. பொது மேடை ஒன்றில் தான் ரவிச்சந்திரனுடை மிகப்பெரும் இரசிகன் எனவும், அவரே தனது ரோல் மொடல் என்றும் தெரிவித்திருந்தது மட்டுமன்றி தான் நடித்த, சங்கர் இயக்கத்தில் வெளிந்த சிவாஜி திரைப்படத்தில் இறுதிப்பகுதியில் மொட்டை போட்டுக்கொண்டு வரும் கட்டத்தில் வில்லன் இவரைப்பார்த்து நீங்க சிவாஜிதானே? எனும்போது இல்லை எம்.ஜி.ஆர். என்று சொல்லிவிட்டு எம்.ஜி.ரவிச்சந்திரன் என்று குறிப்பிட்டதன்மூலம் ரவிச்சந்திரனிடம் தன்னிடமிருந்த தீவிர இரசிப்புத்தன்மையினை குறிப்பிட்டிருப்பார். ஒரு ரோல் மொடலை கொண்டு அவர்களையே வென்று கௌரவிக்கும் சந்தர்ப்பங்கள் இவைதான்.

கிரேக்க தத்துவஞானியான அரிஸ்டோட்டில் பற்றி உங்களுக்த்தெரிந்திருக்கும். அவர் தனது ரோல் மொடல் என்று கருதிக்கொண்ட பிளேட்டோவின் வசிப்பிடமான எதென்ஸ்க்குச் சென்று மூன்றுவருடங்களாக பிளேட்டோவிடம் மாணவராக இருந்து கற்க வேண்டியவைகள் தமது சந்தேகங்கள் என அத்தனையினையும் ஐயமறக் கற்றுக்கொண்டு பின்னர் தான் ஒரு கல்விச்சாலையினை நிறுவி, மேலும் பல தத்துவ ஞானிகளை உருவாக்கியதுடன், இதன்மூலம் உலக மாற்றத்திற்கே பெருவித்திட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

aristotle-plato

ஒன்றை உன்னிப்பாக கவனித்துப்பாருங்கள், தமது ரோல் மொடல்களை பின்பற்றி பிரசித்தமானவர்கள் அனைவருமே அப்படியே அவர்களை கொப்பி அடிக்காமல் தமது திறமைகளையும், தமது ஆளுமைகளையும் பெருவீச்சாக வளர்த்துக்கொண்டு முன்னேறிவந்ததாலேயே தமது ரோல் மொடல்களை விட தாம் மேலும் முன்னேற்றம் கண்டவர்காக உருவாக முடிந்தது.

முன்னைய பதிவுகள் 

நெஞ்சே எழு 13 – வள்ளுவன் என்ற வளவாளர்

நெஞ்சே எழு 12 – ஆணின் வெற்றிகளின் பின்னால்..

நெஞ்சே எழு 12 – ஆணின் வெற்றிகளின் பின்னால்..

நெஞ்சே எழு 11 – தவறவிடும் தவறுகள்

நெஞ்சே எழு 10: காசு கைகளில் இருக்க!

நெஞ்சே எழு  9 – உள உடல் புத்தூக்கத்திற்கான சுற்றுலாக்கள்

நெஞ்சே எழு  8 – வெற்றிகளுக்கு படிகளாகும் பேச்சுக்கலையும் பேச்சுவார்த்தைகளும்

நெஞ்சே எழு 7 – இராட்சத பலம் தரும் வலுவூட்டல்கள்…

நெஞ்சே எழு 6 – விதைக்குள் உறங்கும் விஸ்வரூபங்கள்..

நெஞ்சே எழு 5 – தயக்கத்தை போக்க தயங்கவேண்டாம்..

நெஞ்சே எழு 4 – வாழ்தலின் தெரிவுகள்

நெஞ்சே எழு 3 – பிக் பொஸ் சமூகம்

நெஞ்சே எழு 2 – தலைவர் எடுத்த முடிவுகள்

நெஞ்சே எழு 1 – மகிழ்தலில் மகிழ்தல்