செய்திகள்

நெம்சோவிற்கு அஞ்சலி செலுத்துவதற்கு வெளிநாட்டு அரசியல்வாதிகளுக்கு ரஸ்சியா அனுமதி மறுப்பு

மொஸ்கோவில் இனந்தெரியாதவர்களால் சுட்டுக்கொல்லப்பட்ட முன்னாள் பிரதி பிரதமர் பொறிஸ் நெம்சோவின் மரணசடங்குகளில் கலந்து கொள்வதற்கு பல அரசியல்வாதிகளுக்கு ரஸ்சிய அதிகாரிகள் தடைவிதித்துள்ளனர்.
போலந்தை சேர்ந்த அரசியல்வாதி ஓருவரிற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ள அதேவேளை லட்வியாவின் ஐரோப்பிய ஓன்றிய பாரளுமன்ற உறுப்பினர் மொஸ்கோ விமானநிலையத்தில் வைத்து திருப்பியனுப்பட்டுள்ளார்.தான் உரிய காரணங்களின்றி தடுக்கப்பட்டதாகவும்,இரண்டு மணிநேரம் தன்னை காத்திருக்க செய்த பின்னர் தனக்கு அனுமதி மறுக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நான் ரஸ்சியாவின் முக்கிய அரசியல் தலைவர்கள் என கருதிய ஓருவரின் மரணசடங்கில் கலந்துகொள்ளவே அங்கு செல்ல முயன்றேன்,ரஸ்சியாவின் சுதந்திரத்திற்காகவும்,எதிர்காலத்திற்காகவும் போராடுபவர்கள் நாளாந்தம் அனுபவிக்கும் விடயங்களுடன் ஓப்பிடும்போது நான் அனுபவித்தது சாதரணமான விடயமே என அவர் குறிப்பிட்டுள்ளார்.
தற்போது சிறையிவலடைக்கப்பட்டுள்ள ரஸ்சிய எதிர்கட்சி தலைவர் அலெக்செய் நவல்னிக்கும் இறுதி சடங்குகளில் கலந்துகொள்ள அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை இறுதிச்சடங்கில் கலந்துகொள்வதற்காக மொஸ்கோ சென்றுள்ள பிரிட்டனின் முன்னாள் பிரதமர் ஜோன் மேஜர் நெம்சோவ் படுகொலை செய்யப்பட்டமை குறித்து வெளிப்படையான விசாரணைக்கு அழைப்பு விடுத்துள்ளார். நெம்சோவின் குரலை ஓடுக்க முடியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.மொஸ்கோவிற்கான தனது விஜயத்தில் துயரமானது இதுவே என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை மொஸ்கோவில் வைக்கப்பட்டுள்ள நெம்சோவின் உடலுக்கு பெருமளவானமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.