செய்திகள்

நேபாளத்திற்கு இலங்கையிலிருந்து உதவிக்குழுவை அனுப்பி வைக்க நடவடிக்கை

நேபாளத்தில் ஏற்பட்டுள்ள பூமி அதிர்வால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு உதவும் வகையில் இலங்கையிலிருந்து உதவிக்குழுவொன்றை அனுப்பி வைப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கையெடுத்துள்ளது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரின் ஆலோசனைகமைய இன்றைய தினம் அந்த குழுவினர் காத்மண்டு நோக்கி பயணமாகவுள்ளனர்.
இந்த குழுவில் மீட்பு பிரிவு , மருத்துவ பிரிவு மற்றும் நிவாரண  உதவிப்பிரிவு ஆகியன உள்ளடங்கியுள்ளதுடன் அவர்கள் நிவாரண பொருட்களையும் கொண்டு செல்லவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை நேபாளத்திற்கு தங்களால் என்ன உதவிகளை வழங்க முடியுமோ அந்த உதவிகளை வழங்க நடவடிக்கையெடுக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.