செய்திகள்

நேபாளத்திலிருந்து 42 இலங்கையர்கள் நாடு திரும்பினர்

நேபாளத்திலிருந்து 42 இலங்கையர்கள் விமானப்படையின் விமானத்தின் மூலம் இன்று நாடு திரும்பியுள்ளனர். இன்று பிற்பகல் 1.30 மணியளவில் இவர்கள் குறித்த விமானத்தின் மூலம்; கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.
இவர்களில் அண்மையில் போட்டியொன்றுக்காக நேபாளத்துக்கு சென்றிருந்த 14 வயதின் கீழான இலங்கையின் உதைப்பந்தாட்ட அணியை சேர்ந்த 23 பேரும் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேபாளத்துக்கு இலங்கையிலிருந்து மீட்புப் பணி உதவியாளர்களை ஏற்றிச் சென்ற விமானத்தின் மூலமே இவர்கள் நாட்டுக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.