செய்திகள்

நேபாளத்தில் இலங்கையர் எவருக்கும் பாதிப்பில்லை

நேபாளத்தில் ஏற்பட்டுள்ள பூமி அதிர்வால் அங்குள்ள இலங்கையர் எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லையென அங்குள்ள இலங்கைக்கான தூதுவர் டபல்.யூ.எம்.செனவிரட்ன தெரிவித்துள்ளார்.
அங்கு இலங்கையை சேர்ந்த 120 பேர் வரையானோர் கல்வி கற்கின்ற நிலையில் சம்பவத்தில் அவர்களில் யாருக்கும் பதிப்பு ஏற்படவில்லையென்பதுடன் வேறு காரணங்களுக்காக அங்கு தங்கியிருப்பவர்களும் பாதிப்புகள் எதுவுமின்றி பாதுகாப்பாக இருக்கின்றதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை தெற்காசிய கால் பந்தாட்ட 14 வயதுக்கு கீழ்ப்பட்ட இலங்கை அணி அங்கு சென்றுள்ள நிiயில் சம்பவத்தை தொடர்ந்து அவர்களை நாட்டுக்கு அழைத்து வர நடவடிக்கையெடுத்துள்ளதாக வெளி விவகார அமைச்சு தெரிவித்துள்ளது.