நேபாளத்தில் பாரிய பூகம்பம்: ஆயிரத்துக்கும் அதிகமானோர் பலி, கட்டிடங்கள், கோவில்கள் தரைமட்டம்
நேபாளத்தின் தலைநகர் காத்மண்டுவில் ஏற்பட்ட பாரிய பூமி அதிர்வில்ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் பலியாகி பெரும் என்னிக்கையானோர் காயமடைந்திருக்கின்றனர்.
ரிச்டர் அளவையில் 7.9 என பதிவாகியுள்ள இந்த பூகம்பம் தலைநகர் காத்மண்டுவிற்கும்,பொகாரா நகரிற்கும் இடையில் மையம் கொண்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் அதிர்வுகள் புதுடில்லிவரை உணரப்பட்டுள்ளன.
இந்த அழிவில் பாதிக்கப்பட்ட மக்களை காப்பாற்றவும் நிவாரண விநியோகங்களை மேற்கொள்ளவும் நேபாள அரசு வெளிநாடுகளிடம் அவசர உதவி கோரியிருக்கிறது.
காயமடைந்தவர்கள் காத்மண்டுவின் முக்கிய மருத்துவமனைகளுக்கு எடுத்துவரப்படுவதாகவும்,உயிரிழப்புகள் குறித்து முழுமையான மதிப்பீடுகள் எதுவும் இதுவரையில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காத்மண்டுவில் பலகோவில்கள் உட்பட கட்டிடங்கள் தரைமட்டமாகியுள்ளதாக தெரியவருகின்றது.
[youtube url=”https://www.youtube.com/watch?v=fClDqZJ5VEU” width=”500″ height=”300″]
[youtube url=”https://www.youtube.com/watch?v=qPcSZrdtLgQ” width=”500″ height=”300″]