செய்திகள்

நேபாளத்தில் பூகம்பத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 10,000 வரை அதிகரிக்கும் என்று அச்சம்

நேபாளத்தில் இடம்பெற்ற பூகம்பம் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10,000 ஐயும் விட அதிகரிக்கலாம் என்று பிரதமர் சுசில் கொய்ராலா தெரிவித்திருக்கும் அதேவளை, அங்கு நிவாரண வழங்கல் மற்றும் மீட்பு நடவடிக்கையில் ஏற்பட்டுள்ள தாமதம் காரணமாக அங்கு கடும் மனிதாபிமான நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

பூகம்பம் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள பல கிராமங்களை இன்னமும் மீட்புப்பணியாளர்கள் நெருங்கமுடியாதவாறு இருப்பதாகவும் இதனால் பாதிப்பு குறித்த முழுமையான விபரங்களை மதிப்பீடு செய்வது இபோதைக்கு சாத்தியமில்லை என்றும் தெரிவிக்கப்படுகிறது. பல கிராமங்கள் முற்றாகவே அழிந்து போயுள்ளன.

பாதிக்கப்பட்ட மக்கள் தொடர்ந்தும் வெற்று வெளிகளில் அமைக்கப்பட்டுள்ள கூடாரங்களிலேயே தொடர்ந்தும் தங்க வைக்கப்பட்டுள்ளனர். சுகாதார சீர்கேடு, குடிநீர் மற்றும் உணவுப் பற்றாக்குறை காரணமாக சிறுவர்களின் நிலைமை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக அங்கிருந்துவரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

 3