செய்திகள்

நேபாளத்தில் பேருந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்து: 12 இந்திய யாத்திரிகர்கள் பலி

இந்திய யாத்திரிகர்கள் சென்ற பேருந்து நேபாள மலைப்பகுதியில் உள்ள பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானதில் அதில் பயணம் செயத 12 பேர் பலியானார்கள். பலர் படுகாயம் அடைந்தனர்.

குஜராத் மாநிலத்தில் இருந்து 45 பேர் காட்மாண்டு அருகில் இருக்கும் 5-ம் நூற்றாண்டை சேர்ந்த பசுபதிநாத் கோவிலுக்கு பேருந்தில் யாத்திரை சென்றனர். வழிபாட்டை முடித்துக்கொண்டு காலையில் ஊர் திரும்பிக்கொண்டிருந்தனர். காட்மாண்டில் இருந்து 75 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் நவ்பீஸ் மலைப்பகுதியில் வந்தபோது, 100 மீட்டர் ஆழ பள்ளத்தாக்கில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் பேருந்தில் பயணம் செய்த 12 பேர் பலியானர்கள். மேலும் 27 பேர் படுகாயம் அடைந்தனர்.

காயம் அடைந்தவர்களில் 6 பேரின் நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது. சிலர் பஸ்சின் அடியில் சிக்கிக்கொண்டிருக்கலாம் என தெரிகிறது. எனவே, பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. கிராம மக்களின் உதவியுடன் மீட்புப்பணிகள் நடந்து வருகிறது. மீட்கப்பட்டவர்கள் காட்மாண்டுவில் இருக்கும் மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.