செய்திகள்

நேபாளத்தில் மதத் தலங்களின் புனரமைப்புக்கு உதவ இலங்கை அரசாங்கம் தீர்மானம்

நேபாளத்தில் இடம்பெற்ற பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட மதத்தலங்களை புனரமைப்பதற்காக இலங்கை அரசாங்கம் உதவிகளை வழங்க தீர்மானித்துள்ளது.

புத்தசாசன மற்றும் உள்ளூராட்சி, மாகாண சபைகள் அமைச்சர் கரு ஜயசூரியவினால் இது தொடர்பாக அமைச்சரவையில் முன்வைத்த யோசனைக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

இதன்படி அங்கு பூகம்பத்தால் அழிவடைந்த மற்றும் பாதிக்கப்பட்ட இந்து மற்றும் பௌத்த மதத் தலங்களை புனரமைக்க இலங்கை அரசாங்கம் நிதி உதவிகளை வழங்கவுள்ளது.