செய்திகள்

நேபாளத்தில் 6 கிராமங்களில் நிலச்சரிவு: 15 பேர் பலியாகியிருக்கலாம் என அச்சம்

நேபாளத்தில் நேற்று பெய்த கனமழை காரணமாக 6 கிராமங்களில் கடும் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் 15 பேர் இறந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
அந்நாட்டின் டப்லேஜங் மாவட்டத்தில் கனமழை பெய்து வந்த நிலையில், அங்குள்ள 6 கிராமங்களில் நேற்றிரவு திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது. அப்போது வீடுகளில் உறங்கிகொண்டிருந்த மக்களில் 15 பேர் காணாமல் போனாதாக கூறப்படுகிறது. அவர்கள் அனைவரும் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. அடத்தியான மலைகள் அடங்கிய பகுதியாக இருப்பதால், இக்கிராமத்திற்கு மீட்பு படையினர் செல்ல தாமதம் ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு காவல்துறை தெரிவித்துள்ளது.
இதனால் காணாமல் போனவர்கள் பற்றிய உறுதியான தகவல்கள் கிடைக்கவில்லை என்றும் காவல்துறை கூறியுள்ளது. மழை காலங்களில் அந்நாட்டில் அடிக்கடி நிலச்சரிவு ஏற்படுவதும், மக்கள் பலியாவதும் தொடர்கதையாகி வருவது குறிப்பிடத்தக்கது.