செய்திகள்

நேரத்தை மிச்சப்படுத்த விமானத்தில் தூங்கும் மோடி

 பிரதமர் மோடி வெளிநாட்டு பயணம் செல்லும் போது, அந்நாட்டு ஓட்டல்களில் தங்குவதை தவிர்ப்பதை வழக்கமாக கொண்டவர் எனவும், பயணத்தின் போது விமானத்தில் தான் தூங்குவார் எனவும் மூத்த அதிகாரிகள் பலர் தெரிவித்துள்ளனர்.

பிரதமர் மோடியின் வெளிநாட்டு பயணம் குறித்து அவருடன் பயணிக்கும் அதிகாரிகளிடம் கேட்ட போது, சில சுவாரசியமாக தகவல்களை அவர்கள் அளித்துள்ளனர்.

அவை, மோடி பிரதமராக பதவியேற்ற 2 ஆண்டுகளில் இதுவரை 95 நாட்கள் வெளிநாட்டில் கழித்துள்ளார். 20 பயணங்களில் 40 நாடுகளுக்கு சென்றுள்ளார். நேரத்தை மிச்சப்படுத்துவதற்காக அவர் இரவு நேர பயணங்களையே மேற்கொள்வார். அதனால் அவர் வெளிநாட்டு பயணத்தின் போது அதிகமாக விமானத்தில் தான் தூங்கி உள்ளார்.

சமீபத்தில் சென்ற 3 நாடுகள் பயணத்தின் போது 3 நாட்கள் இரவு ஏர்இந்தியா விமானத்தில் தான் தூங்கி உள்ளார். 2 நாட்கள் மட்டுமே வெளிநாட்டு ஓட்டல்களில் தங்கி உள்ளார். அதில் வாஷிங்டனில் ஒரு நாளும், ரியாத்தில் ஒரு நாள் இரவும் தங்கி உள்ளார். அவர் இரவு நேர பயணத்தை தவிர்த்து, அங்கு தங்கி இருந்தால் நாங்கள் நாடு திரும்ப, குறைந்தபட்சம் 6 நாட்களாவது கூடுதலாக ஆகி இருக்கும். பிரஸல்ஸ் செல்லும் போதும் நள்ளிரவிலேயே புறப்பட்டோம், 9 மணி நேர பயணத்திற்கு பின் காலை 6 மணிக்கு அங்கு சென்றடைந்தோம். அடுத்த நாள் அதிகாலையில் முக்கியமான நிகழ்ச்சிகள் திட்டமிடப்பட்டிருந்தால் மட்டுமே வெளிநாட்டு ஓட்டல்களில் இரவு நேரத்தில் தங்குவார்.

மார்ச் 31ம் தேதி வேலை தினம் என்பதால் வெளிநாட்டு வாழ் இந்தியர்களை தொந்தரவு செய்ய அவர் விரும்வில்லை. தன்னை கவனிக்க வருவதற்காக அவர்கள் வேலைகளை புறக்கணிக்க வேண்டாம் என கூறி விட்டார். விமானப் பயணத்தின் போதும் அதிகமாக தூங்காமல், பல விஷயங்களை பற்றி விரிவாக தெரிந்து கொள்ள விரும்புவார். இந்தியா திரும்பும் போதும் அடுத்த பணிகளுக்கு தன்னை தயார் படுத்திக் கொண்டே வந்தார் என தெரிவித்துள்ளனர்

N5