நேரு பல்கலை பிரச்னைகளுக்கு காங்கிரஸ், இடதுசாரி கட்சிகளே காரணம்,”
”ஐதராபாத் பல்கலை, ஜவஹர்லால் நேரு பல்கலை பிரச்னைகளுக்கு காங்கிரஸ், இடதுசாரி கட்சிகளே காரணம்,” என, மத்திய நகர்ப்புற மேம்பாட்டுத்துறை அமைச்சர் வெங்கையா நாயுடு குற்றம் சாட்டியுள்ளார்.
பெங்களூரில் நடந்த, கர்நாடக பா.ஜ., செயற்குழு கூட்டத்தை, மத்திய நகர்ப்புற மேம்பாட்டுத் துறை அமைச்சர் வெங்கையா நாயுடு துவக்கி வைத்து பேசியதாவது:மத்திய அரசு அமைந்து, இரண்டு ஆண்டு நிறைவடைகிறது. பா.ஜ., ஆட்சிக்கு வரும் முன், நாட்டின் சூழ்நிலை, அதன் பின், ஏற்பட்டுள்ள மாற்றங்கள் பற்றிய ஆவணங்களை தயாரித்து வருகிறோம். அவற்றை, விரைவில் வெளியிடுவோம்.
விரைவில், ஐந்து கோடி ஏழை பெண்களுக்கு, இலவச சமையல் காஸ் இணைப்பு திட்டம் செயல்படுத்தப்படும். கடந்த, 10 ஆண்டுகளில், ஐதராபாத் பல்கலையில், 11 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டனர். அப்போது, ராகுலோ, மல்லிகார்ஜுன கார்கேவோ, அங்கு ஏன் செல்லவில்லை? ஐதராபாத், ஜவஹர்லால் நேரு பல்கலை பிரச்னைகளுக்கு காங்கிரஸ், இடதுசாரி கட்சிகளே காரணம். இவ்வாறு வெங்கையா நாயுடு பேசினார்.
N5