செய்திகள்

நேற்று கொழும்பில் கண்டுபிடிக்கப்பட்ட 17 பேரில் 10 பேர் உறவினர்கள்

நேற்று கொழும்பில் கொரோனா தொற்றுக்கு உள்ளானதாக அடையாளம் காணப்பட்ட 17 பேரில் 10 பேர் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் என இராணுவ தளபதி தெரிவித்துள்ளார்.
கடந்த மார்ச் 12ஆம் திகதி இந்தியாவுக்கு பயணம் மேற்கொண்டு வந்திருந்த நிலையில் கடந்த 15ஆம் திகதி கொழும் தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளதாக அடையாளம் காணப்பட்ட கொட்டாஞ்சேனை கெசல்வத்தை பகுதியை சேர்ந்த 59 வயதுடைய பெண்ணின் வீட்டுக்கு அருகிலுள்ள வீடுகளில் வசித்தவர்களே இவ்வாறாக கொரொனா தொற்றுக்கு இலக்காகியுள்ளனர்.
இதேவேளை நேற்றைய தினத்தில் அடையாளம் காணப்பட்ட 16ஆவது நபர் குறித்த பெண்ணின் கணவனுடன் நெருக்கமான தொடர்புகளை பேணியவர் என தெரியவந்துள்ளது. -(3)