செய்திகள்

நைஜீரியாவில் இன்று மனித குண்டு தாக்குதலுக்கு 20 பேர் பலி

வடக்கு நைஜீரியாவின் மைடுகுரி நகரில் உள்ள  பகுதியில் இன்று தீவிரவாதிகள நடத்திய தற்கொலை தாக்குதலில் இருபதுக்கும் அதிகமானவர்கள் பலியாகியுள்ளனர்.

நைஜீரியாவின் புதிய அதிபராக பொறுப்பேற்றுள்ள முஹம்மது புஹாரி அந்நாட்டின் ராணுவ தலைமையகத்தை அபுஜாவில் இருந்து மைடுகுரி நகருக்கு மாற்றப்போவதாக கடந்த வெள்ளிக்கிழமை அறிவித்தார். மைடுகுரியில் போகோஹரம் மற்றும் இதர தீவிரவாத குழுக்கள் பெருமளவிலான தற்கொலைப்படை தாக்குதல்களை நடத்தி வருவதை தடுக்கவே இந்த முடிவு எடுக்கப்பட்டதாக கூறப்பட்டது.

இந்த முயற்சியை முறியடிக்கும் விதமாக மைடுகுரியில் தீவிரவாதிகள் தங்களது தாக்குதலை அதிகரித்துள்ளனர். இன்று அதிகாலை மைடுகுரியின் மத்திய பகுதியில் நடத்தப்பட்ட தாக்குதலில் 30 பேர் பலியாகினர். இந்நிலையில் இன்று பிற்பகல்  தற்கொலைப்படை தீவிரவாதி நடத்திய மனித குண்டு தாக்குதலில் இருபதுக்கும் அதிகமானோர் பலியாகியுள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.