செய்திகள்

நைஜீரியாவில் பஸ் நிலையம் மீது பெட்ரோல் டேங்கர் லாரி மோதி தீப்பிடித்தது: 37 பேர் உடல் கருகி சாவு

நைஜீரியாவில் பஸ் நிலையம் மீது பெட்ரோல் டேங்கர் லாரி மோதி தீப்பிடித்ததில் 37 பேர் பரிதாபமாக இறந்தனர்.
தெற்கு நைஜீரியாவின் ஓனிஷ்டாசா நகரில் வந்துகொண்டிருந்த பெட்ரோல் டேங்கர் லாரி, திடீரென கட்டுப்பாட்டை இழந்து பஸ் நிலையத்திற்குள் புகுந்தது வெடித்துச் சிதறியது. பெட்ரோல் வெளியேறி தீப்பிடித்ததால் அங்கிருந்த பஸ்களும், மோட்டார் சைக்கிள்களும் தீப்பற்றி எரிந்தன. பயணிகள் அலறியடித்துக்கொண்டு நாலாபுறம் சிதறி ஓடினர்.

தீயில் சிக்கிக்கொண்ட 37 பேர் உடல் கருகி சம்பவ இடத்திலேயே இறந்தனர். படுகாயங்களுடன் மீட்கப்பட்ட 7பேர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். இதில் சதித்திட்டம் எதுவும் இல்லை என்று காவல்துறை செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
நைஜீரியாவில் குண்டும் குழியுமான சாலைகள், வாகனங்களை போதிய பராமரிப்பு இல்லாமல் இயக்குவது போன்ற காரணங்களால் அடிக்கடி விபத்து ஏற்படுவது குறிப்பிடத்தக்கது.