செய்திகள்

நைஜீரியாவில் 10 வயது சிறுமிகளின் தொடர் தற்கொலை தாக்குதல்கள்

நைஜீரியாவின் வடகிழக்கு பகுதியிலுள்ள பொ டிஸ்கும் நகர சந்தையில் பத்தே வயது நிரம்பிய இரு சிறுமிகள் நடத்திய தற்கொலை தாக்குதலில் குறைந்தது நன்கு பேர் கொல்லப்பட்டு பலர் காயம் அடைந்திருக்கிறார்கள்.

முன்னதாக, சனிக்கிழமையன்று மைடுகுறி என்ற சந்தையில் மற்றொரு பத்து வயது நிரம்பிய சிறுமி ஒருத்தி நடத்திய மற்றொரு தற்கொலை தாக்குதலில் 20 பேர் கொல்லப்பட்டு பெரும் எண்ணிக்கையானோர் காயமடைந்தனர்.

இஸ்லாமிய பொக்கோ ஹராம் பயங்கரவாதிகள் நைஜீரியாவில் நேற்று 19 கிராமங்களுக்குள் புகுந்து பொதுமக்கள மீது துப்பாக்கி பிரயோகம் செய்து 2000 ற்கும் அதிகமானோரை சுட்டுகொலை செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.