செய்திகள்

நைஜீரிய போகோ ஹராம் தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட 300 சிறுமிகள் மீட்பு

போகோ ஹராம் தீவிரவாதிகளிடமிருந்து 300 சிறுமிகள் மற்றும் பெண்களை நைஜீரியா ராணுவம் மீட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அந்நாட்டின் வடகிழக்கு பகுதியில் அமைந்துள்ள சாம்பிசா வனப்பகுதியில் போகோ ஹராம் தீவிரவாதிகளுக்கும், நைஜீரிய ராணுவத்திற்கும் இடையே கடும் சண்டை நடந்தது. அதன் முடிவில், 3 முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டிருந்த 300 சிறுமிகள் மற்றும் பெண்களை ராணுவம் மீட்டுள்ளது.

இவர்களில் 200 சிறுமிகள் என்றும், 93 பேர் பெண்கள் என்பதும் தெரியவந்துள்ளது. மீட்கப்பட்டவர்களில் கடந்த ஏப்ரலில் சிபோக் என்ற நகரின் கிறிஸ்தவ உண்டு உறைவிட பள்ளியிலிருந்து கடத்திச் செல்லப்பட்ட 219 சிறுமியர் இல்லை என தெரியவந்துள்ளது.

எனவே கடத்தி செல்லப்பட்ட சிறுமிகளின் நிலை என்னவென்று தெரியவில்லை. அவர்கள் இன்னும் தீவிரவாதிகளின் பிடியில் தான் உள்ளதாக கருதப்படுகிறது.