செய்திகள்

நோட்டுக்களை அச்சடித்த அரசியல்வாதியின் அக்கா : மஹிந்த வெளியிடும் தகவல்

தனது ஆட்சிக்காலத்தில் போலியான ரூபா நோட்டுகளை அச்சடித்த அரசியல்வாதியொருவரின் அக்காவை சிறையில் போடாது விட்டது தான் செய்த தவறுகளில் ஒன்று என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார். தெய்யந்தர பகுதியில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இன்று இருக்கும் அமைச்சர்கள் இலட்சம் இலட்சமாக கொடுக்கின்றனர். அது சமூர்த்தி பயனாளிகளுக்கு அல்ல. அவர்களின் நெருக்கமானவர்களுக்கு. இதனை தான் அவர்கள் செய்துக்கொண்டிருக்கின்றனர். இப்போது ஒரு சட்டம் அப்போது இருந்தவர்களுக்கு ஒரு சட்டம். எனது காலத்தில் சில தவறுகள் இடம்பெற்றன. இல்லையென்று கூற மடியாது. நோட்டுகளை அச்சடித்த சில அரசியல்வாதிகளின் அக்காக்களை நாம் சிறையில் போடவில்லை. இதுதான் நாம் செய்த தவறு. என அவர் தெரிவித்துள்ளார்.