செய்திகள்

நோயாளர்களுக்கு வழங்கும் மருந்துகளுடன் அதன் விலைகளும் குறிப்பிடப்பட வேண்டும்

நோயாளர்களுக்கு விநியோகிக்கப்படும் மருந்து சிட்டுக்களுடன் மருந்து வகைகளின் விலைகளும் உள்ளடக்கப்பட வேண்டுமென நுகர்வோர் பாதுகாப்பு அதிகாரசபை தனியார் வைத்தியசாலைகள் மற்றும் தனியார் சிகிச்சை நிலையங்களுக்கு அறிவித்துள்ளது.

தனியார் வைத்தியசாலைகள் மற்றும் சிகிச்சை நிலையங்களில் மருந்துகளின் விலையை விட அதிக பணத்தை அறவிடுவதாக தெரிவித்து நுகர்வோர் அதிகார சபையில் மேற்கொள்ளப்பட்டுள்ள முறைப்பாடுகளையடுத்தே இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளதாக அந்த அதிகார சபை தெரிவித்;துள்ளது.

நுகர்வோர் பாதுகாப்பு சட்டத்;தின் பிரகாரம் எந்தவொரு பொருளை கொள்வனவு செய்யும் போது அதன் விலைகளை கொள்வனவு செய்பவர்கள் அறிந்துக்கொள்ளும் வகையில் அதற்கான விலைகள் குறிப்பிடப்பட்டுள்ள பற்றுச்சிட்டை பெற்றுக்கொள்வது நுகர்வோரின் உரிமையாகும்