செய்திகள்

நோயாளியை வைத்தியசாலையில் அனுமதிக்க சென்ற பெண்ணை அடைத்து வைத்த வைத்தியசாலை ஊழியர்கள்

வவுனியா பொது வைத்தியசாலையில் என்ற மனநிலை பாதிக்கப்பட்ட நோயாளியை அனுமதிக்க சென்ற வயதான பெண்மணியை மனநிலை பாதிக்கப்பட்டவர்களின் வார்ட்டில் ஆறு மணிநேரம் பூட்டி வைத்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இச்சம்பவம் குறித்து தெரியவருவதாவது கந்தையா சிவசுப்பிரமணியம் மனநிலை பாதிக்கப்பட்ட நோயாளி இவர் கடந்த 13 நாட்களாக வவுனியா பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் வைத்தியசாலை ஊழியர்களால் 16-04-2015 அன்று நோயாளியின் சகோதரி யோகதாஸ் யோகேஸ்வரியின் வீட்டில் நோயாளி குணமாகி விட்டதாக தெரிவித்து ஒப்படைக்கப்பட்டார.;

ஆனால் அவர் குணமடையவில்லையென்றும் நோயின் தாக்கம் அதிகமாக காணப்பட்டதன் காரணமாக தாங்கள் மீண்டும் இரவு 11.30 மணியளவில் வவுனியா பொது வைத்தியசாலைக்கு நோயாளியை கூட்டி சென்றதாகவும் வைத்தியசாலையில் வைத்தியர் நோயாளியை வார்ட்டில் அனுமதிக்க சிபாரிசு செய்த போதும் வார்ட்டில் உள்ள ஊழியர்கள் நோயாளியை அனுமதிக்க மறுப்பு தெரிவித்ததாக தெரிவித்த குடும்பத்தினர் நோயாளியை வார்ட்டில் அனுமதித்தே ஆகவேண்டும் என தாங்கள் கோரியதால் கோபமடைந்த வைத்தியசாலை ஊழியர்கள் மனநோயாளியின் அக்காவாகிய யோகதாஸ் யோகேஸ்வரியை மனநோயாளிகள் வார்ட்டினுள் தள்ளி பூட்டி விட்டதுடன் தனது மகளை இரவு 12.00 மணி என்றும் பாராமல் வைத்தியசாலைக்கு வெளியே துரத்திவிட்;டதாகவும் யோகதாஸ் யோகேஸ்வரி தெரிவித்தார்.

இச்சம்பவம் குறித்து வைத்தியசாலை பணிப்பாளரிடம் முறையிட்ட போது அவர் பொறுப்புடன் பதில் கூறவில்லையென்றும் யோகதாஸ் யோகேஸ்வரியின் மகனை படம் எடுத்ததற்காக பொலிசில் ஒப்படைக்கப்போவதாக அச்சுறுத்தியதாகவும் தெரிவிக்கப்படுகிறது. மேற்படி சம்பவம் குறித்து இலங்கை மனித உரிமை ஆணைக்கு மற்றும் வடமாகாண சுகாதார அமைச்சிலும் முறைப்பாடு செய்துள்ளதாக யோகதாஸ் யோகேஸ்வரி தெரிவித்தார்.