செய்திகள்

நோ பார்க்கிங்கில் காரை நிறுத்தி டிராபிக் போலிஸில் மாட்டிக் கொண்ட நடிகை

மும்பை விமான நிலையத்தில் நோ பார்க்கிங் பகுதியில் வெகு நேரமாக காரை நிறுத்தியிருந்ததால் நடிகை அசினின் காரை டிராபிக் போலிஸ் பூட்டு போட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விமான நிலையத்தில் நோ பார்க்கிங் பகுதியில் நீண்ட நேரமாக காருக்குள் காத்திருந்த அசின் இதனால் அதிர்ச்சி அடைந்தார்.

டிராபிக் போலிஸிடம் அசின் கெஞ்சோ கெஞ்சு என்ற கெஞ்சியதால், சுமார் 15 நிமிடம் கழித்தே காரை போலீசார் விடுவித்தனர்.