செய்திகள்

னவரி 8ல் நிகழ்ந்த அமைதியான புரட்சிக்கு பாதிப்பு ஏற்ப்பட அனுமதிக்கமாட்டேன்

2015 ஜனவரி 8 இல் நடத்தப்பட்ட அமைதியான புரட்சி இல்லாமல் செய்யப்படுவதற்கு நாம் ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்திருக்கிறார்.

மாத்தறை- அம்பாந்தோட்டை இடையிலான கடுகதிப்பாதைக்கான அடிக்கல் நட்டு விழாவில் இன்று கலந்து கொண்டபோதே இதனை தெரிவித்த ஜனாதிபதி நான் அரசியலில் நுழைந்தது ஒரு நிகழ்வோ அலல்து விபத்தோ அல்ல. எனது அரசியல் அனுபவம் 49 வருடங்களை எட்டுகிறது. ஜனவரி 8இல் நிகழ்ந்த மாற்றத்துக்கு எந்த கட்சியினதும் முடிவுகள் பாதிப்பை ஏற்ப்படுத்துவதை நான் அனுமதிக்க மாட்டேன். இந்த மாற்றத்தை நான் பாதுகாப்பேன். என்று அவர் மேலும் தெரிவித்தார்.