செய்திகள்

பகுதிகள் நீக்கப்பட்ட19 A : அது ஒரு நடுப்பாதையாக இருக்கும்

கலாநிதி தயான் ஜயதிலக

President19 A இன் மீதான சமரில் நான்கு வெற்றியாளர்கள் இருக்கிறார்கள; அவர்களில் ஒருவராக, சரியாகச் சொல்லப் போனால் இரண்டாவது பெரிய வெற்றியாளராக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இருக்கிறார். அவர் தனக்கு வலுவூட்டும் தளத்தின் இரண்டு ஆக்கக்கூறுகளும் ஒன்றுடன் ஒன்று போராடுபவையுமான அவரது நட்பு அணியான ஐ.தே . கட்சி மற்றும் அவரது கட்சியான சிறிலங்கா சுதந்திரக் கட்சி ஆகியவற்றுக்கிடையேயான சமநிலையை முற்திறமையுடன் பேணிக் கொண்டே தனது அதிகாரங்களில் அநேகமானவற்றைத் தக்க வைக்க அவரால் முடிந்திருக்கிறது. எனினும் இதில் ஆகப் பெரிய வெற்றியாளர் ஜனாதிபதி சிறிசேன அல்ல. அந்த வெற்றியளர் ஒரு மரணித்துப் போய்விட்ட மனிதரான ஜனாதிபதி யூனியஸ் றிச்சாட் ஜயவர்த்தனா ஆகும். அவருடைய 1973ம் ஆண்டின் அரசியலமைப்பு கட்டுறுதியான ஒன்றாகும். அது அவருடைய தூரத்து மருமகனான ரணில் விக்கிரமசிங்கவும் அவருடைய பழைய போட்டியாளரான சிறிமாவோ பண்டாரநாயக்காவின் மகளான சந்திரிகா குமாரதுங்காவும் அதன் மையப்பொருளாக இருந்த நிறைவேற்று ஜனாதிபதி முறையை நீக்க எடுத்த கூட்டு முயற்சிகளுக்குத் தாக்குப்பிடித்து நிற்கும் அளவுக்கு கட்டுறுதியானதாக இருந்தது.

Japan: September 12, 1979 Tokyo President of Sliranka Junius Richard JAYAWARDENE at Japan National Press Club Photo by Kaku Kurita ƒXƒŠƒ‰ƒ“ƒJ‘哝—Ìஆட்சியுரிமையையும் அதிகாரத்தையும் நிறைவேற்று ஜனாதிபதியிடம் இருந்து பிரதமரை நோக்கி தீர்க்கமாக நகர்த்த முயற்சிகளை மேற்கொண்ட பிரிவுகளில் அனேகமானவற்றுக்கு உச்ச நீதிமன்றம் ஆப்பு வைத்துவிட்டது. JR இன் விகிதாசார தேர்தல் முறைக்கு நன்றி சொல்ல, தங்களின் எண்ணிக்கைகள் போதுமான அளவில் இருந்த எதிர்கட்சியினர் அரசியலமைப்பு சபையின் திரைமறைவில் முக்கியமான பாத்திரமொன்றில்… முடிவை நிர்ணயிக்கும் பாத்திரமொன்றில் பொறுப்புக்கூற தேவையில்லாத “குடிசார் சமூகத்தை” இரகசியமாக பொருத்தி விட ரணில் மற்றும் சந்திரிகா எடுத்த முயற்சிகளை முறியடித்திருக்கிறார்கள்.

mahinda-1-colombotelegraphமூன்றாவது பெரிய வெற்றியாளராக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச இருக்கிறார். எதிர்கட்சியிலிருந்த அவரது விசுவாசிகள், ரணில் – சந்திரிகாவின் திட்டத்துக்கு முழு சுதந்திரக் கட்சியையும் முழுமையாக விற்றுவிடும் முயற்சிகளை முறியடிக்க ஒரு கசப்பான பின்னணி-காப்பு நடவடிக்கையை மேற்கொண்டு தடுத்திருக்கிறார்கள். இது தனது முக்கூட்டு சகபாடிகளுக்கு சார்பாக வெளிப்படையாக செயற்பட முடியாமல், நடுநிலையான பாத்திரத்தை வகிக்க செய்திருக்கும் அல்லது அதற்கு உதவியிருக்கும் ஒரு உந்தத்தை ஏற்படுத்தி விட்டிருக்கிறது. எல்லாவற்றையும் உடைத்து நொருக்கும் ஆளணியினராக, அதாவது எல்லாவற்றையும் நாசமாக்குபவர்களாக காணப்படும் தவறை செய்வதையும் எதிர்க் கட்சியினர் தவிர்த்திருக்கிறார்கள். அதற்கு பதிலாக ஆக்கபூர்வமான விமர்சகர்கள் மற்றும் கடுமையான பேச்சுவார்த்தையாளர்களின் பாத்திரத்தை அவர்கள் வகித்திருக்கிறார்கள். பாராளமன்றத்தில் இடம்பெற்ற வாதத்தின்போது SLFP – UPFA ஒன்றாக திரள்வதையும் 19 A ஐ நாசமாக்காத அதேவேளை ரணில் விக்கிரமசிங்கவை எதிர்த்து நிற்பதையும் காணக்கூடியதாக இருந்தது. அதன் போது தனித்தது போன்று காணப்பட்ட ராஜித சேனாரத்னவைத் தவிர்த்து ரணிலுடனான கூட்டுச் சதியில் இணைந்திருந்த SLFP இனுடைய சந்திரிகா கோட்பாட்டை, திரும்ப மேலெழுந்து விட்ட UNP மற்றும் SLFP – UPFA இடையேயான முரண்பாடு மறைத்து விட்டது.

இந்த மிதமான, அதாவது யாரும் மிகக் குறைந்தளவு என்ற சொல்லக்கூடியதும் 19 A இன் விளைவாக பிரதமரை நோக்கிய இந்த நகர்வானது மஹிந்த பிரதமராகினால் அவருக்கு மட்டும் நன்மை விளைவிப்பதாக இருக்கும். உண்மையை சொல்லப் போனால் சிறிலங்காவில் எழுதப்பட்ட அரசியல் நூலொன்றின் தலைப்பை இரவல் பெறுவதானால் “பிரதமர் பதவி பங்கீடுடானது” 1977க்கு பின் வந்த எந்த தேர்தலையும் விட இப்போது அதிக முனைப்பானதாக தெரிகிறது. இது மஹிந்த ராஜபக்சவைத் தவிர வேற எவருக்கும் நன்மை பயக்காது.

வெற்றியாளர்களில் இறுதியானவர்

17-1429261786-ranil-wickremesinghe-600வெற்றியாளர்களில் இறுதியானவராக ரணில் விக்கிரமசிங்க இருக்கிறார். அவரது மூலத்திட்டத்தை அவர் சமர்ப்பித்த முதல் வரைவிலிருந்தே புரிந்து கொள்ளமுடியும். உச்ச நீதிமன்றத்தால் தடுக்கப்பட்ட பகுதிகளும் எதிர்கட்சியினரின் எதிர்ப்பாலும் ஜனாதிபதி சிறிசேனாவின் கூட்டுச் செயற்பாட்டாலும் நீக்கப்பட்ட பகுதிகளும் இதை எடுத்துக் காட்டுகின்றன. ஏற்பட்டிருக்கிற அதிகார நகர்வானது ஆகக் குறைவானதாக இருப்பதோடு, ரணில் முயற்சித்ததை விட மிகக் குறைவானதாக இருப்பதோடு அவருடைய புதிய – முற்போக்கு அரசியலமைப்பு ரீதியான அதிகார கைப்பற்றுகை முயற்சியிலும் அவரைப் பின்வாங்க நிர்ப்பந்தித்திருக்கிறது.

downloadஆனால் அவருக்கு மிகவும் நேர்த்தியான ஒரு ஆறுதல் பரிசு கிட்டியிருக்கிறது. சீர்திருத்த செயற்பாட்டுக்கான பாராட்டில் ஜனாதிபதி சிறிசேனாவோடு அவரையும் பங்கு கொள்ள வைத்திருப்பதே அதுவாகும். இதில் ஆகப்பெரிய தோல்வியாளர்களாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிகாவும் தமிழ் தேசிய கூட்டமைப்பினரும் (TNA) இருக்கிறார்கள்.
19வது திருத்தத்தினுடைய மாநகர் சார்ந்த குடிசார் சமூக மாற்றுருவின் காப்பாளராக CBK இருக்கிறார். 19 A ஆனது CBK இன் அரசியல் ரீதியான புரட்சி பெற்றெடுத்த குழந்தையாக இருக்கிறது. அதாவது நிறைவேற்று ஜனாதிபதி முறையை ஒழித்துக்கட்ட பேரொலியாய் மீண்டும் பிறந்த நவமுற்போக்கு குழந்தையாக அது இருக்கிறது. JR ஜயவர்த்தனாவுடைய அரசியலமைப்பானது மீண்டும் மீண்டும் அவரது முயற்சிகளை தடுப்பதாகவே இருக்கிறது. இந்த வகையில்; அவரது (1995 மற்றும் 1997) பிராந்தியங்களின் கூட்டாட்சி பொதி மற்றும் அவரது அரசியலமைப்பு வரைபு ஆகியவற்றைக் குறிப்பிடலாம். அவருடைய அரசியலமைப்பு வரைபை உருவாக்கிய அவரது அரசியலமைப்பு ஜாம்பவான் கலாநிதி ஐயம்பதி விக்கிமரட்னவின் வரைபையே இம்முறையும் உச்ச நீதிமன்றம் பொசுக்கி விட்டிருக்கிறது.

TNA யும் அரசியலமைப்புச் சபைக்குள் நழுவிச் செல்வதன் மூலம் அரசை கையாள எதிர்பார்த்த குடிசார் சமூக குமபல்களுமே ஆகக் குறைந்த வெற்றியாளர்களாக ஆகியிருக்கிறார்கள். ரணிலும் சந்திரிகாவும் இணைந்து 19 A + ஐ உருவாக்கினார்கள். அதுவே இப்போது 19 A – ஆகக் குறைக்கப்பட்டிருக்கிறது.

ladyofjustice-300x185119 A தொடர்பான போராட்டமானது பாராளுமன்ற பேரம் பேசுதலில் ஒரு வரலாறாக ஆகிவிட்டிருக்கிறது. இதன் பெறுபேறானது 1978 இன் இரண்டாவது குடியரசுஅரசியலமைப்பை எழுப்பி நிறுத்துவதாக அல்லாமல் நிகழ்கால மட்டத்துக்குக் கொண்டு வருவதாக இருக்கிறது. ரணில், சந்திரிகா, JVP மற்றும் TNA இனர் விரும்பியதைப் போல் அதன் வயிற்றைப் பிளந்து எல்லாவற்றையும் வெளியே எடுக்காமல், ராஜபக்ச ஆட்சியில் இருந்தது போல் ஊதிப்பருத்த நிலையில் வைத்திருக்காமல், அது அதிகாரங்களை வெட்டிக் குறைத்திருக்கிறது. நிறைவேற்று ஜனாதிபதி முறை மீது மேற்கொள்ளப்பட வேண்டியிருந்த அத்தியாவசியமான ஒரு முழு சீர்திருத்தமாக அது இருக்கின்றதே யொழிய எந்த வகையிலும் அதிகாரத்தை கையளிப்பதாகவோ பதவி நீக்குவதாகவோ அது இல்லை. எவரும் இதனை ஒரு வெற்றி- தோல்வியற்ற விளையாட்டாகவோ எவரும் வெற்றி தோல்வி பெற முடியாத விளையாட்டாகவோ, அதாவது உண்மையாகவே இருக்கின்ற அரசியல் சமநிலையை பிரதிபலிப்பதாகவோ எடுத்துக் கொள்ளலாம். அல்லது கொஞ்சம் அதிகமாக நலம் நாடும் முறையில் கூறுவதானால் ஒரு மிதமான சரிசெய்யும் விதத்திலானதும் தேசிய நலன்கள் மற்றும் மக்களின் இறைமையோடும் இயைந்து போகிறதுமான ஒரு எல்லோருக்கும்-வெற்றி சூழ்நிலையாகவும் எடுத்துக் கொள்ளலாம்.