செய்திகள்

பக்தாத் தற்கொலைகுண்டு தாக்குதல்களில் 34 பேர் பலி

ஈராக்கிய தலைநகர் பக்தாத்தில் இடம்பெற்ற மூன்று குண்டுவெடிப்புகளில் 34 ற்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
சியா மதப்பிரிவினர் அதிகமாக வாழும் பக்தாத்தின் பகுதியொன்றில் உள்ள சந்தைபகுதியொன்றில் இடம்பெற்ற முதலாவது தற்கொலை குண்டு தாக்குதலில் 22 பேர்கொல்லப்பட்டுள்ளதுடன் 50 ற்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர்.
பின்னர் பக்தாத்தின் மத்திய பகுதியிலும், தென்மேற்கு பகுதியிலும் உள்ள இரு சந்தைகளில் இடம்பெற்ற குண்டுவெடிப்புச்சம்பவங்களில் மேலும் பலர் கொல்லப்பட்டுள்ளனர்.