செய்திகள்

பங்களாதேசின் வெற்றிகள் தொடர்கின்றன.

பாக்கிஸ்தானிற்கு எதிரான முதலாவது இருபதிற்கு இருபது போட்டியிலும் பங்களாதேஷ் வெற்றிபெற்றுள்ளது.
இன்று டாக்காவில் நடைபெற்றபோட்டியில் 22 பந்துகள் மீதமிருக்கையில் மூன்று விக்கெட்களை மாத்திரமிழந்து பங்களாதேஷ் அபார வெற்றியை பெற்றது.
முதலில் துடுப்பெடுத்தாடிய பாக்கிஸ்தான் அணியால் தனது இருபது ஓவர்களில் 141 ஓட் டங்களை மாத்திரம் பெறமுடிந்தது.தனது முதலாவது போட்டியில் விளையாடும் முக்தர் அஹமட் 37 ஓட்டங்களை பெற்றார்
வெற்றிபெறுவதற்கு 142 ஓட்டங்கள் தேவை என்ற இலக்குடன் பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பங்காளதேஸ் அணி 16 ஓவர்களிலேயே தனது வெற்றி இலக்கை பெற்றது.
சகிப் உல் ஹசன் 57 ஓட்டங்களை பெற்றார்.