செய்திகள்

பங்களாதேஷ் -4விக்கட்டுக்களை இழந்த நிலையில் 236

பாகிஸ்தான் அணிக்கும் பங்களாதேஷ் அணிக்கும் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இன்று ஆரம்பமானது.இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற பங்களாதேஷ் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

இதன்படி அந்த அணி இன்றைய முதலாம் நாள் ஆட்ட நேர முடிவு வரையில் 4 விக்கட்டுக்களை இழந்த நிலையில் 236 ஓட்டங்களை பெற்றிருந்தது.

துடுப்பாட்டத்தில் பங்களாதேஷ் அணி சார்பாக மொமினுல் ஹக் 80 ஒட்டங்களை பெற்று கொடுத்தார்.
பந்து வீச்சாளர்களுக்கு சாதகமற்ற ஆடுகளத்தில் நாணயசுழற்சியில் வெற்றிபெற்று முதலில் துடுப்பபெடுத்தாடிய பங்களாதேஸ் அணி ஆரம்பத்தில் தடுமாற்றத்துடன் ஆடினாலும் பின்னர் பாக்கிஸ்தான் தவறவிட்ட சந்தர்ப்பங்களை பயன்படுத்தி ஸ்திரமான நிலையில் முதலாவது நாள் ஆட்டத்தை பூர்த்திசெய்தது.பாக்கிஸ்தான் இன்றையநாள் ஆட்டத்தில்5 கட்ச்களை தவறவிட்டமை குறிப்பிடத்தக்கது