செய்திகள்

பசறை மண்சரிவில் குழந்தையொன்றும் பெண்ணொருவரும் பலி

பசறை பிபிலேகம பிரதேசத்தில் வீடான்றின் மீது மண்மேடு மற்றும் கற்பாறை சரிந்து விழுந்ததில் 8மாத குழந்தையொன்றும் பெண்னொருவரும் உயிரிழந்துள்ளனர். நேற்று இரவு இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸர் தெரிவித்துள்ளனர்.
நேற்று இரவு கடும் மழையுடனான கால நிலை நிலவிய  வேளையில்  மண் மேட்டுடன்  கல்லொன்று குறித்த வீட்டின் மீது விழுந்துள்ளதுடன் இதன்போது விட்டிலிருந்த 8மாத குழந்தை யும் பெண்ணொருவரும் அதில் சிக்கி உயிரிழந்துள்ளனர்.  இதேவேளை இந்த சம்பவத்தில் குழந்தையின் தாய் காயமடைந்துள்ளதுடன் அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.