செய்திகள்

பசில் ராஜபக்ஸ கைது செய்யப்பட்டார்

முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஸில் ராஜபக்ஷ சற்று முன்னர் நிதி மோசடி விசாரணை பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். அவருடன் மற்றும் 2 முன்னாள் அதிகாரிகளும் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.
திவிநெகும திணைக்களத்தில் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படும் பாரியளவிலான நிதி மோசடி தொடர்பாக இன்று காலை 1.00 மணி முதல் அவரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளதுடன் பின்னர் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவருடன் மேலும் இரண்டு அதிகாரிகளும் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவர்கள் இன்று இரவு கடுவலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதனையடுத்து அவர்கள் தடுத்துவைக்கப்படுவார்கள். அமைச்சின் முன்னாள் செயலாளர் நிஹால் ஜயதிலக்க, திவிநிகும நிதிக்குப் பொறுப்பாக இருந்த ரணவக்க ஆகியோரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
Basil