செய்திகள்

பசில் கோட்டாவுக்கு வேட்மனு கொடுப்பதை எதிர்ப்பதாக வாசுதேவ தெரிவிப்பு

முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ மற்றும் பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ ஆகிய இருவருக்கும் எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலின் போது வேட்பு மனுக்களை கொடுப்பதனை தான் எதிர்ப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

கோட்டாபயவுக்கு நான் எப்படியும் எதிர்ப்பு தெரிவிப்பவன். அவர்ää அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்தவர். நாடாளுமன்றத்துக்கு அருகில் உள்ள நினைவு தூபியை அகற்றவேண்டாம் என்று நாங்கள் எதிர்த்தபோது அதனை எதிர்த்தார். ஏனையவர்களின் கோரிக்கையை அவர் கவனத்தில் கொள்ளமாட்டார். அவர் அதிகாரத்துக்கு வருவதற்கு தகுதியில்லாதவர் என்றும் அவர் கூறியுள்ளார்.