செய்திகள்

பசில் நாளை பாராளுமன்ற கூட்டத்தில் கலந்துக்கொள்வார் : விமான நிலையத்தில் வரவேற்க ஏற்பாடுகள்

முன்னாள் பொருளதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ நாளைய தினம் இலங்கை வரவுள்ளதுடன் பாராளுமன்ற கூட்டத்திலும் கலந்துக்கொள்ளவுள்ளார்.
நாளை பிற்பகல் 1மணியளவில் இலங்கைக்கு வருவேன் எனவும் நாளைய தினமே பாராளுமன்ற கூட்டத்தொடரிலும் கலந்துகொள்வேன் எனவும் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
தனிப்பட்ட காரணத்திற்காக அமெரிக்காவுக்கு சென்றிருந்தேன் அதன்படி திட்டமிட்டிருந்த நாளைய தினத்தில் நான் நாடு திரும்புகின்றேன் இது இரகசியமானதல்ல எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை நாடு திரும்பும் பசில் ராஜபக்ஷவை வரவேற்பதற்காக அவரின் ஆதரவாளர்களினால் விமான நிலையத்திலும் மற்றும் பிரதேசங்களிலும் விசேட நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜனாதிபதி தேர்தல் முடிந்த பின்னர் அமெரிக்காவுக்கு இவர் சென்றிருந்த நிலையில் இவர் மீதான நிதி மோசடி குற்றச்சாட்டுகள் தொடர்பாக நீதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.