செய்திகள்

பசில் ராஜபக்ச பிணை மனு பரிசீலனை ஒத்திவைப்பு

நிதி மோசடி குற்றச்சாட்டில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்சவின் பிணை மனு கோரிக்கை பரிசீலனையை கொழும்பு மேல் நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

குறித்த மனு நீதிபதி சரோஜனி குசலா முன்னிலையில் இன்று திங்கட்கிழமை பரிசீலனைக்கு வந்தபோது எதிர்வரும் 15ம் திகதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளார்.

மனு தொடர்பில் எதிர்ப்புக்கள் இருப்பின் அதற்கு முன்னர் சமர்பிக்குமாறு நீதிபதி உத்தரவிட்டார்.