செய்திகள்

பசில் ராஜபக்‌ஷ ஏப்ரல் 20 இல் நாடு திரும்புவார்: சட்டத்தரணி தகவல்

முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்‌ஷ ஏப்ரல் 20 ஆம் திகதி நாடு திரும்பி தன்மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் அறிக்கை ஒன்றை வெளியிடுவார் என அவரது சட்டத் தரணி தெரிவித்திருக்கின்றார்.

ஜனவரி 9 ஆம் திகதி இடம்பெற்ற ஜனாதிபதித் தோதலில் மகிந்த ராஜபக்‌ஷ தோல்வியடைந்ததையடுத்து தன்னுடைய மனைவி சகிதம் வெளிநாடு சென்ற பசில் ராஜபக்‌ஷ தற்போது அமெரிக்காவில் இருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

பொருளாதார அபிவிருத்தி அமைச்சில் இடம்பெற்ற மோசடிகள் தொடர்பில் அவரைக் கைது செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையிலேயே எதிர்வரும் 20 ஆம் திகதி அவர் கொழும்பு திரும்புவார் என அவரது சட்டத்தரணி தெரிவித்திருக்கின்றார்.