செய்திகள்

பசில் வந்தது தனக்கு தெரியாதாம்: மகிந்த கூறுகின்றார

முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ நாடு திரும்பியது தனக்கு தெரியாதென அவரின் சகோதரரான முன்னாள் ஜனாதிபதி மகிந்தராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

கம்பஹா பகுதியில் நேற்று நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டிருந்த மகிந்தவிடம் பசில் நாடு திரும்பியுள்ள விடயம் தொடர்பாக ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

ஊடகவியலாளர்களின் கேள்விக்கு பதிலளித்துள்ள மகிந்த, ” ஓ.. அவர் வந்து விட்டாரா? எனக்கு தெரியாது. அவர் கம்பஹாவில் அரசியல் செய்தார். நான் எனது அரசியலை  செய்தேன் அவ்வளவுதான்” என தெரிவித்துள்ளார்.