செய்திகள்

பஞ்சாப் அணியை எளிதில் வீழ்த்தி வெற்றி பெற்றது மும்பை

2015 ஐ.பி.எல் இன் இன்றைய முதல் போட்டி மொகாலியில் நடைபெற்றது. இதில் பஞ்சாப் – மும்பை அணிகள் மோதின. நாணயசுழற்சியில் வென்ற மும்பை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
பட்டேல் (59) சிம்மன்ஸ் (71) ஆகியோரின் அதிரடியால் மும்பை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 172 ஓட்டங்களை பெற்றது.

173 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் பஞ்சாப் அணியின் விஜய் சேவாக் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். சேவாக் 2 ஓட்டங்கள் எடுத்த நிலையில் ஏமாற்றம் அளித்தார். அடுத்துஆஸி அணியின் அதிரடி துடுப்பாட்ட வீரர் மகஸ்;வெல்களம் இறங்கினார். இவர் 12 எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அடுத்து 3-வது விக்கெட்டுக்கு விஜய் உடன் மில்லர் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி நேர்த்தியாக விளையாடியது. ஆனால் அதிரடியாக விளையாட முடியவில்லை. இதனால் பஞ்சாப் அணியின் ஓட்டங்கள் மந்த கதியிலேயே வந்தன.
6.6 ஓவரில் 50 ஓட்டங்களை தொட்ட பஞ்சாப் அணி 13.2 ஓவரில் 100 ஓட்டங்களை பெற்றது. 43 ஓட்டங்களை எடுத்த மில்லர் 17-வது ஓவரின் 2-வது பந்தில் ஆட்டம் இழந்தார். அத்துடன் பஞ்சாப் அணியின் தோல்வி உறுதியானது. அணித்தலைவர்பெய்லி 21 ஓட்டங்கள் பெற்ற நிலையில் ரன் அவுட் ஆனார். அடுத்து வந்த அக்சார் பட்டேலும் பந்து ஏதும் சந்திக்காமல் ரன் அவுட் ஆனார்.
இறுதியில் பஞ்சாப் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 149 ஓட்டங்களையே எடுத்தது. இதனால் மும்பை அணி 23 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.