செய்திகள்

பஞ்சாப் அணி 3–வது தோல்வி: பேட்ஸ்மேன்கள் மீது மில்லர் பாய்ச்சல்

ஐ.பி.எல். போட்டியில் பஞ்சாப் அணி கொல்கத்தாவிடம் வீழ்ந்து 3–வது தோல்வியை தழுவியது.

மொகாலியில் நடந்த இந்த ஆட்டத்தில் முதலில் விளையாடிய கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியால் 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 138 ரன்னே எடுக்க முடிந்தது. ஷான் மார்ஷ் அதிகபட்சமாக 41 பந்தில் 56 ரன்னும், முரளி விஜய் 26 ரன்னும் எடுத்தனர். மோர்னே மார்கல், சுனில் நரீன் தலா 2 விக்கெட்டும், உமேஷ் யாதவ், பியூஸ் சாவ்லா, யூசுப்பதான் தலா 1 விக்கெட்டும் எடுத்தனர்.

பின்னர் விளையாடிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 17.1 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 141 ரன் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. உத்தப்பா 28 பந்தில் 53 ரன்னும் (9 பவுண்டரி), காம்பீர் 34 ரன்னும் எடுத்தனர். அக்சர் பட்டேல், பிரதீப் சாகு தலா 2 விக்கெட் எடுத்தனர்.

prv_6bade_1461078722

இந்த வெற்றி குறித்து கொல்கத்தா அணி கேப்டன் காம்பீர் கூறியதாவது:–
எங்களது தொடக்க ஜோடி பார்ட்னர்ஷிப் மிகவும் முக்கியமானது. ராபின் உத்தப்பா பேட்டிங் மிகவும் அபாரமாக இருந்தது. அவரது இந்த சிறப்பான ஆட்டம் இனிவரும் போட்டிகளிலும் நீடிக்கும் என்று நம்புகிறேன். அணி தொடர்ந்து வெற்றியில் நீடிப்பதையே விரும்புகிறேன்.

எங்களது பந்துவீச்சு மிகவும் சிறப்பாக இருக்கிறது. சுனில் நரீனுக்கு அதிகமான நெருக்கடி கொடுக்க விரும்பவில்லை. அவரையும் சேர்த்து 6 சிறந்த பவுலர்கள் உள்ளனர்.

இவ்வாறு காம்பீர் கூறியுள்ளார்.

இந்த தோல்வி குறித்து பஞ்சாப் அணி கேப்டன் டேவிட் மில்லர் கூறியதாவது:–

இந்த தோல்விக்கு எனக்கு மிகுந்த ஏமாற்றத்தை அளிக்கிறது. பேட்ஸ்மேன்களின் மோசமான ஆட்டத்தால் தோல்வி ஏற்பட்டது. நாங்கள் போதுமான அளவு ரன்களை குவிக்கவில்லை. மிடில் ஆர்டர் வரிசையில் பேட்டிங் மோசமாக இருந்தது. எனது பேட்டிங்கும் மோசமாக இருந்தது. நானும் ரன்களை குவிக்கவில்லை.

பீல்டிங்கின் போதும் சில வாய்ப்புகளை தவறவிட்டோம். இனிவரும் ஆட்டங்களில் வீரர்கள் சிறப்பாக விளையாட வேண்டும். இவ்வாறு மில்லர் கூறியுள்ளார்.