செய்திகள்

படக்குழுவினரை ஆச்சரியத்தில் ஆழ்த்திய ரஜினி

ரஜினி நடிக்கும் புதிய படத்தை  தாணு தயாரிப்பில் ரஞ்சித் இயக்கவிருக்கிறார். அந்தப் படத்துக்கு ஒத்திகை பார்க்கப்பட்டு வருகிறது.

இதற்கு முன்பும் இயக்குநர் ரஞ்சித் இயக்கிய அட்டகத்தி மற்றும் மெட்ராஸ் படங்களுக்கு இப்படித்தான் ஒத்திகை நடத்தினார். அதேபோல ரஜினி படத்துக்கும் நடத்த முடிவு செய்து, அதற்கேற்ப அரங்கம் அமைத்துக் ஒத்திகை நடத்தி வந்தார்.

ரஜினியிடம் மட்டும் நீங்க வர வேணாம் நேராக படப்பிடிப்புக்கு வந்தால் போதும் என கூறியுள்ளார் இயக்குநர் ரஞ்சித்.

நேற்று திடீரென கிளம்பி, ஒத்திகை நடக்கும் இடத்துக்கே ரஜினி வந்துள்ளார். மற்றவர்கள் எப்படி நடிக்கிறார்கள், அந்த காட்சி எப்படி வருகிறது என்பதையெல்லாம் கவனித்துவிட்டு, தனது காட்சி வரும்போது இருங்க நானும் நடித்துப் பார்க்கிறேன் என்று களமிறங்கியுள்ளார்.

இது சரியா? இப்படி நடிச்சா சரியா? என இயக்குனரைக் கேட்டுக் கேட்டு நடித்துக் காண்பிக்க, மொத்த படக்குழுவினரும் ஆச்சரியத்துடன் அவரை பார்த்துள்ளனர்.