செய்திகள்

படமாகிறது ஆந்திராவில் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவம்

ஆந்திர மாநிலம் சித்தூர் வனப் பகுதியில் கடந்த 7–ம் தேதி 20 தமிழர்கள், ஆந்திர போலீசாரால் சுட்டுக்கொலை செய்யப்பட்டனர்.

இந்த சம்பவம் இந்தியா முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்து சி.பி.ஐ. விசாரணை வேண்டும் என்று பல்வேறு தமிழ் கட்சியினரும், அமைப்பினரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்நிலையில் ஆந்திரா என்கவுண்டர் சம்பவத்தை பின்னணியகாக் கொண்டு புதிய ஒன்று தயாராகவிருக்கிறது. இந்தப் படத்துக்கு தூக்கு மர பூக்கள் என்று தலைப்பு வைத்திருக்கிறார்கள்.

இதில் முன்னணி நடிகர், நடிகைகள் நடிக்க உள்ளனர். திரைக்கதை, வசனத்தை கிரைம் கதை மன்னன் ராஜேஷ்குமார் எழுத கதை எழுதி இயக்குகிறார்கள் இரட்டையர்களான வி.ஆர்.காளிதாஸ், வி.அகஸ்டின். பாபு ராஜேந்திரன் ஒளிப்பதிவை கவனிக்க படத்துக்கு இசையமைக்கிறார் சுனில் சேவியர். படத்தை ஜெய விஜய சாமுண்டீஸ்வரி புரொடக்ஷன் – ஸ்காட் மூவி மேக்கர்ஸ் இணைந்து தயாரிக்கிறது.

செம்மரக்கட்டை வெட்டினார்கள் என்ற குற்றச்சாட்டின் பெயரில் மானிதாபமின்றி, துன்புறுத்தி, உடல் உறுப்புகளை சிதைத்து கொன்ற கொடூரத்தின் பின்னணி என்ன? என்ற உண்மை சம்பவத்தை வெளிப்படுத்தவே இப்படம் என்றார்கள் இயக்குனர்கள். விரைவில் நடிகை, நடிகர்கள் பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிடவிருக்கிறார்கள். சம்பவம் நடைபெற்ற பகுதிகளிலேயே படப்பிடிப்பை நடத்திக் கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.