செய்திகள்

படை வீரர் தின நிகழ்வில் உள்நுழைய முயன்ற இராணுவ வீரரிடமிருந்து துப்பாக்கி ரவை மீட்பு

விடு­தலைப் புலி­க­ளு­ட­னான யுத்­தத்தில் உயி­ரி­ழந்த இரா­ணுவ வீரர்­களை நினைவு கூரும் வித­மாக இடம்­பெற்ற இரா­ணுவ வீரர் நினைவு தின நிகழ்வில் கலந்­து­கொள்ள வந்த இரா­ணுவ வீரர் ஒரு­வ­ரிடம் இருந்து 7.6 மில்லி மீற்றர் ரக துப்­பாக்கி ரவை ஒன்று மீட்­கப்­பட்­டுள்­ளது.

மாத்­தறை, கொட்­டு­வே­கொட பிர­தே­சத்தில் சனத் ஜய­சூ­ரிய மைதா­னத்தில் 7 ஆவது நுழை­வாயில் ஊடாக நுழைய முற்­பட்ட இரா­ணுவ வீரர் ஒரு­வ­ரி­ட­மி­ருந்தே இந்த துப்­பாக்கி ரவை மீட்­கப்­பட்­ட­தா­கவும் குறித்த இரா­ணுவ வீரர் கைது செய்­யப்­பட்­டுள்­ள­தா­கவும் பொலிஸார் தெரி­வித்­தனர்.

சாதா­ரண உடையில் வருகை தந்­துள்ள குறித்த இரா­ணுவ வீரர் மன்னார் 25 ஆவது கெமுனு ஹேவா பல­காய படைப் பிரிவில் சேவை­யாற்­று­பவர் எனவும் விடு­மு­றையின் நிமித்தம் வீட்­டுக்கு வந்­தி­ருந்­தவர் எனவும் பொலிஸ் தக­வல்கள் தெரி­வித்­தன.

தெய்­யந்­தர, பகல மெத­கம பிர­தே­சத்தை சேர்ந்த குறித்த இரா­ணுவ வீரர் உள் நுழைய முற்­பட்ட போது நாரம்­மலை பொலிஸ் நிலை­யத்­தி­லி­ருந்து விஷேட கட­மைக்­காக அழைக்­கப்­பட்­டி­ருந்த பொலிஸ் அதி­காரி அவரைக் கைது செய்து மாத்தறை பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளதாக அந்த தக வல்கள் மேலும் தெரிவித்தன.