செய்திகள்

பட்ஜெட்: அரச ஊழியர் சம்பளம் 10 ஆயிரம் ரூபா அதிகரிப்பு! பொருட்கள் விலை குறைப்பு

அரச ஊழியர்களின் தற்போதைய சம்பளம் அவர்களின் வாழ்க்கைச் செலவுக்கு போதுமானதாக இல்லை என்பதால் அரச ஊழியர்களின் சம்பளம் 10 ஆயிரம் ரூபாவால் அதிகரிக்கப்படும் என நிதி அமைச்சர் ரவி கருநாயக்க அறிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் இடைக்கால வரவு செலவுத்திட்டத்தை சமர்ப்பித்து உரையாற்றிவரும் அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார். பெப்ரவரி மாதம் 5ஆயிரம் ரூபாவும் ஜூன் மாதம் 5ஆயிரம் ரூபாவும் அதிகரிக்கப்படும். இதேவேளை தனியார் ஊழியர்களுக்கு 2ஆயிரத்து 500 ரூபா சம்பள உயர்வு வழங்குமாறு தனியார் நிறுவன உரிமையாளர்களிடம அமைச்சர் ரவி கருணாநாயக்க கோரிக்கை விடுத்துள்ளார்.

எதிர்வரும் ஏப்ரல் மாதம் தொடக்கம் ஓய்வூதியம் 1000 ரூபாவால் அதிகரிக்கப்படுகிறது. உடன்அமுலுக்கு வரும் வகையில் கர்ப்பிணித்தாய்மாருக்கு 20 ஆயிரம் ரூபா கொடுப்பனவு வழங்கப்படும் என்றும் அமைச்சா தெரிவித்தார்.

இன்று நள்ளிரவு தொடக்கம் 12.5 கிலா காஸ் சிலிண்டரின் விலை 300 ரூபாவால் குறைக்கப்படுகிறது. இதன்படி 1596 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படும் என்று அமைச்சர் ரவி கருணாநாயக்கா தெரிவித்தார். இதேவளை மண்ணெண்ணெய் 6 ரூபாவால் விலை குறைக்கப்பட்டு லீற்றர் 59 ரூபாய்க்கு வாங்க முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.