செய்திகள்

பட்டதாரிகள் கொழும்பில் ஆர்ப்பாட்டம்

பட்டதாரிகள்  ஊழியர் ஒன்றியத்தால்  ஏற்பாடு செய்யப்பட்ட ஆர்ப்பாட்டம் இன்று கொழும்பு கோட்டை புகையிரத நிலையம் முன்பாக நடைபெற்றது.

MN4 தர பட்டதாரிகளுக்கும், MN5 தர பட்டதாரிகளுக்குப் போலவே சம்பளம் வழங்க வேண்டும் எனவும் ஏற்கனவே உறுதியளித்தபடி பட்டதாரிகளுக்கு துவிச்சக்கர வண்டிகள் வழங்கப்பட வேண்டும் எனவும், அபிவிருத்தி ஊழியர்களுக்கான நிபந்தனைகளை நீக்கவேண்டும் எனவும் கோரிக்கைகளை முன்வைத்து இவ் ஆர்ப்பாட்டம் நடந்தது.

அரசுக்கெதிரான இவ் ஆர்ப்பாட்டத்தில் பல பட்டதாரிகள் கலந்துகொண்டதோடு ஆர்ப்பாட்டகாரர்கள் ஜனாதிபதி செயலகம் நோக்கி பேரணியாகவும் நகர்ந்து சென்றனர். ஆர்ப்பாட்டக்காரர்களை பொலிசார் தடுத்து நிறுத்த முற்பட்டபோது  அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

image-258e95ad5010684337b600fecb06f3c4548b1dbd1a6ee1e4de642f7c38488e63-V image-812a865be8918b626b962fa7d53e68a660f3746e3d862dea744082d40463f33e-V image-0effd870f5d8a91cdf332f6cc631183c30e2f7b5cf56850efee1c2919f1cef4a-V