செய்திகள்

பட்டப்பகலில் வீதியால் சென்ற யுவதியின் தங்கச் சங்கிலி அபகரிப்பு: யாழில் சம்பவம்

பகல் வேளையில் யாழ்.றக்கா வீதியால் சென்று கொண்டிருந்த யுவதியின் மூன்றரைப் பவுண் தங்கச் சங்கிலியை மோட்டார்ச் சைக்கிளில் வந்த இருவர் அறுத்துக் கொண்டு தப்பியோடியுள்ளனர்.

கொக்குவில் கிழக்குப் பகுதியைச் சேர்ந்த யுவதி நேற்றுத் திங்கட்கிழமை யாழ்.றக்கா வீதியால் துவிச்சக்கர வண்டியில் சென்று கொண்டிருந்த போதே இந்தத் திருட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் செய்யப்பட்ட முறைப்பாட்டையடுத்துப் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

யாழ்.நகர் நிருபர்-