செய்திகள்

பட்டாசுகளை சிறுவர்களிடம் கொடுப்பதை தவிர்க்கவும் : பெற்றோர்களுக்கு பொலிஸார் கோரிக்கை

புத்தாண்டு காலப்பகுதியில் பட்டாசு மற்றும் வானவெடிகள் தொடர்பாக அவதானமாக செயற்படுமாறு பொலிஸார் மக்களை கேட்டுக்கொண்டுள்ளனர்.
குறிப்பாக சிறுவர்களிடம் அவற்றை கொடுக்கும் போது பெற்றோர் அவதானத்துடன் இருக்க வேண்டுமென பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.
பட்டாசுகளை கொள்வனவு செய்யும் போது அதனை பயன்படுத்தும் முறைகளை அறிந்துக்கொள்ள வேண்டுமெனவும் முடிந்தவரை அதனை சிறுவர்களிடம் வெடிப்பதற்காக கொடுப்பதனை தவிர்த்துக்கொள்ளுமாறு பொலிஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இது தொடர்பாக அவதானத்துடன் பெற்றோர்கள் செயற்பட்டால் அதனால் ஏற்படும் விபத்துக்களை தவிர்த்துக்கொள்ள முடியுமென பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை புத்தாண்டு கால விடுமுறைகளின் சுற்றுலா செல்வோர் நீர் நிலைகளில் குளிக்கும் போது அவதானமாக இருக்குமாறும் பாதுகாப்பற்ற இடங்களில் குளிப்பதனை தவிர்த்துக்கொள்ளுமாறும் பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.
n10