செய்திகள்

பணத்தில் ரஜினி , விஜய்யை முந்தினார் அஜித்

போர்ப்ஸ் பத்திரிக்கை நேற்று வெளியிட்ட பட்டியலின் படி பணம்,புகழ்,செல்வாக்கு ஆகியவற்றில் அகில இந்திய ரீதியில் நடிகர் சல்மான் கான் முதல் இடத்தில் உள்ளார். வருடத்திற்கு 244 கோடிக்கும் அதிகமான வருமானம் பெற்று அதிகம் வருமானம் பெறுபவர் மட்டுமல்லாமல் இந்திய அளவில் மிகுந்த புகழ் வாய்ந்தவராகவும் உள்ளார் சல்மான் கான்.

நடிகர் ஷாரூக்கான் 202 கோடியுடன் பணத்தில் இரண்டாம் இடத்திலும் புகழில் 7 ம் இடத்திலும் இருக்கிறார். விளையாட்டு வீரரான டோணிக்கு பணத்தில் 5 ம் இடமும், புகழில் மூன்றாம் இடமும் கிடைத்துள்ளது. டோணியையும் மிஞ்சி புகழில் இரண்டாம் இடத்தில் இருக்கிறார் விராத் கோஹ்லி. பண விஷயத்தில் அவருக்கு 12 ம் இடம் கிடைத்து இருக்கிறது. நடிகைகளில் தீபிகா புகழில் 5 ம் இடத்திலும் பணத்தில் 9 வது இடத்திலும் இருக்கிறார்.

தமிழ் நடிகர்களில் இந்தப் பட்டியலில் விஜய் மற்றும் ரஜினியை பண விஷயத்தில் பின்னுக்குத் தள்ளி முதலிடத்தில் இருக்கிறார் நடிகர் அஜித். ரஜினிக்கு பண விஷயத்தில் 21 வது இடமும் புகழ் விஷயத்தில் 89 இடமும் கிடைத்துள்ளது. விஜய்க்கு பண விஷயத்தில் 23 வது இடமும் புகழ் விஷயத்தில் 80 வது இடமும் கிடைத்துள்ளது. ரஜினி மற்றும் விஜயை பண விஷயத்தில் முந்திய அஜித் பணத்தில் பெற்ற இடம் 19 புகழில் பெற்ற இடம் 98. இந்தப் பட்டியலில் நடிகர் தனுஷும் இடம்பெற்று இருக்கிறார்.