செய்திகள்

பண்டாரவளை ரயில் நிலைய பொறுப்பதிகாரி மீது தாக்குதல்

பண்டாரவளை ரயில் நிலைய பொறுப்பதிகாரி மீது இனந்தெரியாத குழுவொன்று  நேற்று  இரவு தாக்குதல் நடத்தியுள்ளது.

vlcsnap-2015-03-21-10h35m33s231

தாக்குதல் காரணமாக காயமடைந்த பொறுப்பதிகாரி பண்டாரவளை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார். ரயில் நிலையத்திற்கு போதையில் வந்த குழுவினரே இவ்வாறு தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக தெரியவந்துள்ளது. டிக்கட் இன்றி ரயில் நிலையத்திற்குள் இவர்கள் பிரவேசித்ததாகவும் அது குறித்து விசாரணைகளை மேற்கொண்ட போதே, இவ்வாறு தன்னைத் தாக்கியதாகவும் பொலிஸ் நிலையத்தில் ரயில் நிலையப் பொறுப்பதிகாரி முறைப்பாடு செய்துள்ளார். மேலும் சம்பவத்துடன் தொடர்புடைய மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பண்டாரவளை பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

vlcsnap-2015-03-21-10h35m23s138